Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாடகை செலுத்தாத காரணத்தினால்….. சீல் வைக்கப்பட்ட கடைகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!

வாடகை செலுத்தாத காரணத்தினால் அதிகாரிகள் 4 மீன் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இதனை அடுத்து மீன் மார்க்கெட்டில் அதிகளவு கடைகள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளின் உரிமையாளர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக கடைக்கு உரிய வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு அளித்துள்ளனர். ஆனாலும் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் 4 மீன் கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

Categories

Tech |