Categories
உலக செய்திகள்

ரிப்பேர் பார்க்க 17 லட்சமா…? ஷாக் கொடுத்த நிறுவனம்…. ஓனர் என்ன செஞ்சாருனு பாருங்க…!!

தெற்கு பின்லாந்தில் டெஸ்லா காரை பழுது பார்க்க 17 லட்ச ரூபாய் கேட்ட ஆத்திரத்தில் அதன் உரிமையாளர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

தெற்கு பின்லாந்தில் டூமாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டெஸ்லா காரை பழுது செய்வதற்காக ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின்பு அந்த நிறுவனத்தினர்கள் காரை பழுது செய்வதற்கு ரூபாய் 17 லட்சம் தேவைப்படும் என்று டூமாசிடம் கூறியுள்ளார்கள்.

இதனைக்கேட்ட அதிர்ந்துபோன டூமாஸ் 17 லட்ச ரூபாய் கொடுத்து டெஸ்லா காரை பழுது பார்ப்பதைவிட 30 கிலோ டைனமைட்டை பயன்படுத்தி அதனை வெடிக்க வைத்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அவர் எடுத்த முடிவின் படியே 30 கிலோ டைனமைட்டை பயன்படுத்தி டெஸ்லா காரை ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து வெடிக்க செய்துள்ளார். இந்த நிகழ்வை டூமாஸ் பொம்மிஜட்காட் என்ற யூடியூபின் மூலம் படம் பிடித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |