மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு.
மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொண்டிருக்கின்ற நாங்கள், பல்வேறு இஸ்லாமிய மக்களுடைய அமைப்புகளை சகோதரர்களாக, தோழர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எங்களுக்கு, தடை செய்யப்பட்டிருக்கின்ற அமைப்பின் மீது மாறுபட்ட கருத்துண்டு, அது வேறு விஷயம். ஆனால் அதற்காக இவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பை வைப்பது, ஒரு கண்ணில் வெண்ணெய் வைப்பது போல ஆர்எஸ்எஸ்யை அனுமதித்து விட்டு அதை தடை செய்திருக்கிறார்கள்.
இப்போது நிலைமை என்ன ? என அருமை தோழர் முத்தரசன் இங்கே அழகாக சொன்னார்கள், இந்த நாடு எவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று… நான் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்,
இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்வதற்கு தடை செய்கின்ற ஒரு சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. புகழ் பெற்ற பாபர் மசூதியை இடுத்து தரைமட்டம் ஆக்கினார்களே… அந்த கயவாளிகள்.. அப்போது இருந்த நரசிம்மராவ் ஒரு சட்டம் போட்டார், என்னவென்று சொன்னால் ? இதற்கு மேல் இந்தியாவிலே எந்த வழிபாட்டு தலங்களிலும், இந்த நீதிமன்றம் தலையிடக்கூடாது என சட்டம் போட்டார்.
நீதிமன்றத்திலே வழக்கு போட கூட கூடாது. 47 ஆம் ஆண்டு எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத்தளங்கள் பாதுகாப்பு சட்டம் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஆர்எஸ்எஸ், பிஜேபிக்காரர்கள் வழக்கு போட்டிருந்தார்கள். அந்த சட்டம் இருக்கின்ற காரணத்தினால் எங்களால் மசூதிக்குள் போய் ஆய்வு நடத்த முடியவில்லை, தேவாலயத்தில் சென்ற ஆய்வு நடத்த முடியவில்லை. எனவே கணம் நீதிபதி அவர்களை அந்த சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று இன்றைக்கு வழக்கு போட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.