Categories
மாநில செய்திகள்

ஜனவரி-1 ஆம் தேதி முதல் மீண்டும்? – வெளியான தகவல்…!!

தமிழகத்தில் ஜனவரி-1 ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், மது பார்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.கோவில்களில் வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மதுக்கடை பார்கள் மட்டும் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பார்கள் அடுத்த மாதம் ஊரடங்கு தளர்விளாவது திறக்க பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |