10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டது . இந்த நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். பின்னர் அமைச்சருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அதில்,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான பாதிப்பு இருக்கின்றது. எனவே இந்த தள்ளி வைப்பு போதுமானதா ? அனைத்தையும் சரி செய்து அதன் பின்பு தேர்வு நடத்த வேண்டும் . அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்பு தேர்வை நடத்துங்கள் என அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தோம்.மற்ற மாநிலங்களில் நடத்துகிறார்கள், கேரளாவில் 27, 28 என்று அறிவித்துள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு ரொம்ப கம்மியா இருக்கு, குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமா இருக்கு என்று சொன்னோம். அதற்க்கு இன்னும் ரெண்டு மூணு நாலுல அறிக்கை விடப்படும். உங்களோட கூட்டத்தை பாத்துக்கிட்டு இருக்க, தீர்மானம் போட்டீங்க, அதுலா தெரியும் ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன் என்று சொல்லி இருக்காரு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.கல்வி முக்கியம் தான், அதை விட உயிர் முக்கியம். பசங்களோட உயிர் முக்கியம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.