Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை!

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா 5 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மசூத் அஸார் திடீரென காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அவன் காணாமல் போகவில்லையென்று செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பகவால்பூரில் (Bahawalpur) இருக்கும் ஜெய்ஷ் இ முகமது  அமைப்பின் புதிய தலைமையகமான மர்காஸ் உஸ்மான் ஓ அலி ( Markaz Usman-o-Ali) கட்டடத்தில் குடும்பத்தினருடன் தங்கி  இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |