கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் ரத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் வருடந்தோறும் குடியரசு தின விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு ஆட்சியர்கள் சென்று உரிய மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரையில் நடைபெறும் குடியரசுதின விழாவை பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.