நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கான பிளான் பயன்படுத்துவோர், அப்பிளானின் வேலிடிட்டியை 345 நாட்களிலிருந்து 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த பிளானில் ஏற்கனவே தினமும் 3 ஜி.பி டேட்டாவும், அளவில்லா அழைப்புகளும், தினமும் 100 குறுஞ்செய்திகளும் இருந்து வந்தது. இதில், மேலும் பி.எஸ்.என்.எல் ட்யூன் மற்றும் டிவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும். இத்திட்டம் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை அதிகமானோர் மொபைல் போர்டபிலிட்டி மூலம் நாடுகிறார்கள் என்பதால், தனது சந்தாதாரர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்க பி.எஸ்.என்.எல் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.