Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி எல்லாம் செய்தோம்… எந்த லாபமும் கிடைக்கல… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கால் வாழைத்தார்கள் விற்பனை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள். தற்போது கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழை விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் வாளையிலேயே பழுத்து வீணாகி வருகின்றது.  மேலும் விவசாயிகள் கடந்த ஆண்டு கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்தோம். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் விலை சரிந்துள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |