ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. இவருடன் ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், தவமணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் போன்ற பலர் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியபெருமாள் நன்றி உரையாற்றினார்.