Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகைக்காக போரை நிறுத்துங்கள்…. ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுக்கும் ஐநா பொதுச்செயலாளர்…!!!

ஈஸ்டர் பண்டிகைக்காக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐநா கூறியிருந்த நிலையில் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஈஸ்டர் தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.  எனவே, ஈஸ்டர் பண்டிகைக்காக நான்கு நாட்கள் போரை நிறுத்த வேண்டும் என்று ஐநாவின் தலைவர் கூறியிருந்தார்.

எனினும் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பிராந்தியங்களை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |