சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் பகுதியில் தாசில்தார் மோகன் தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை வருவாய்த்துறையினர் நிறுத்தியபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரியில் சோதனையிட்டதில் 5 டன் அரிசி மூட்டையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து லாரி மற்றும் அரிசி மூட்டையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் அரியூரில் வசிக்கும் ராமலிங்கம் லாரியை பழனி என்பவர் ஓட்டி வந்ததும், இவர் வாணியம்பாடி பகுதியிலிருந்து ஆந்திரபிரதேச மாநில சித்தூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.