ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரின் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் பேரில் பறக்கும் படை காவல்துறையினர் பைபாஸ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 2 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் தேவேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.