கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்பு கானா பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் கேட்பாரற்று 40 மூட்டைகள் கிடந்தது. இதை திறந்து பார்த்ததில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.