Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காலம் மாறிபோச்சி…. பெண்களே இப்படி பண்ணலாமா…. காவல்துறையினரின் திடீர் சோதனை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜா சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சரோஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சோதனையில் சிக்கிய ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்த குற்றத்திற்காக சரோஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |