ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை கொடுத்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினர். அதன்பின் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்மனுவை பெற்றுக்கொண்டார்.
அம்மனுவில் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் 60 குடும்பங்கள் குள்ளரங்கம்பாளையம் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்குள்ள அனைவரும் தினக்கூலி வேலை செய்து வருகிறோம். வீட்டு மனை பட்டா எங்களில் 40 குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் எஞ்சியிருக்கும் 20 குடும்பங்களுக்கு இன்னும் வீட்டு மனை பட்டா வழங்கபடவில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக காலி நிலத்தில் ஓட்டு வீடு மற்றும் ஓலை குடிசை கட்டி வசித்து வருகிறோம். பலமுறை வீடு மனை பட்டா கேட்டு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இதனால் எங்களிடம் இருக்கும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளோம். என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது. திருப்பூரில் உள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கலெக்டரிடம் அலுவலகத்தில் அளித்த மனுவில் நான் தொழில் காரணமாக சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதிக்கு அருகில் உள்ள காசுகாரன்பாளையம் பகுதியில் என் குடும்பத்துடன் வசித்து வந்தேன்.
அவ்வப்போது எங்களது வீட்டின் அருகில் வசித்து வந்த ஒரு பெண் என்னிடம் கடனாக 15 லட்சம் கேட்டார். என்னிடம் அப்போது பணம் இல்லை. ஆனால் நான் எனக்குத் தெரிந்த வேறு ஒரு நபரிடம் 12 லட்சம் வாங்கி கொடுத்தேன். நான்கு மாதங்களில் அப்பணத்தை திரும்பத் தருவதாக கூறினார். ஆனால் இரண்டு வருடங்களாகியும் இன்னும் அப்பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். ஆகவே அப்பெண் மீது சரியான நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.