தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மளிகை பொருட்களை மலிவான விலையில் பெரும் வகையில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவுதலின் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நியாயவிலை கடைகள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது.
அதன்படி நியாய விலை கடையில் பணிபுரிந்த சில ஊழியர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை,கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது .இந்த நிதியை பெற உயிரிழந்த நியாய விலை கடை ஊழியர் பணியில் ஈடுபட்ட சான்று, கொரோனா தொற்றால் இறந்ததற்கான மருத்துவச் சான்று மற்றும் இறப்புச் சான்று போன்ற ஆவணங்களை மாவட்ட இணை பதிவாளர்களிடம் வழங்குமாறு கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்கும் திட்டத்தை மகிழ்ச்சியாக ஏற்கிறோம். மேலும் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.