Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லாமல்…. ரேஷன் கடையில் குவிந்த கூட்டம்…. ஒழுங்குபடுத்திய காவல்துறையினர்….!!

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்குவதற்கு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதனால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

இவ்வாறு ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் ரேஷன் கடைக்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது ரேஷன் கடைகளில் நின்ற பொதுமக்களை காவல்துறையினர் சமூக இடைவெளியுடன் வரிசையாக நிற்க வைத்துள்ளனர்.

Categories

Tech |