தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்குவதற்காக நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு tnpds.gov.in என்று இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் புதிய குடும்ப அட்டைகளை பெறுதல், நகல் குடும்ப அட்டைகளை பெறுதல், உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ரேஷன் பொருட்களை சேமித்து வைப்பதற்காக 243 கிடங்குகளும் மற்றும் 350 மண்ணெண்ணெய் பங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.நியாய விலை கடையில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருள்கள் வெளிச்சந்தையில் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பொருட்களின் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் நியாயவிலை கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான டெண்டர்களை கிறிஸ்டி என்ற நிறுவனம் எடுத்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பொருட்களை வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த காரணத்தினால் உணவுத்துறை டெண்டர் விட அவசரகால வேண்டிய நிலையில் குடிமை பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் அதிகாரிகளுக்கு இடையே உள்ள தகராறு காரணமாக டெண்டர் விடுவது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கு அமைச்சர் சக்கரபாணி, காலம் தாழ்த்தாமல் டெண்டர்களை சீக்கிரம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நீடித்துக் கொண்டே இருந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து ஏற்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.