திருப்பத்தூரில் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக 1 நாளைக்கு 200 பேருக்கு பொருட்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் கூறியபோது மாவட்டத்தில் 514 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி முடிவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் ரேஷன் கடைகளில் 200 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக விநியோகம் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து தாலுகாகளுக்கும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் கூறியுள்ளார்.