தேனியில் கழிவுநீர் தொட்டியினுள் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடியிலிருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா நடுநிலைப் பள்ளிக்கு பின்புறமாக பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பசு மேய்ந்து கொண்டே அங்கிருந்த கழிவு நீர் தொட்டியின் மீது ஏறி நின்றுள்ளது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டி உடைந்ததால் பசு மாடு தொட்டிக்குள் விழுந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டுள்ளனர்.