சுர்ஜித் மீட்புப்பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. பள்ளம் தோண்டும் பணியில் 25 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரம் மூலமாக 3 மணி நேரம் துளையிடும் பணி நடைபெற்று வருகின்றது.
சுர்ஜித் உயிரோடு மீட்க வேண்டும் என்று மத வேறுபாடு இன்று பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்கள் , மசூதிகள் , இந்து கோவில்கள் என வழிபாடு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் , பண்டிகை கூட பார்க்காமல் குழந்தையை மீட்க செயலாற்றி வருகின்றோம்.சுர்ஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இங்கு நடக்கும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் அடிக்கடி கேட்டறிந்து வருகிறார். அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்க கவனமுடன் குழி தோண்டப்பட்டு வருகிறது. நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு தெரியவில்லை. ரோபோ கேமரா உள்ளே சென்று குழந்தையின் கையில் வெப்பத்தை பதிவு செய்தது என்று மீட்புப்பணி குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார்.