Categories
தேசிய செய்திகள்

கோதாவரி ஆற்றங்கரை… சூழ்ந்து கொண்ட வெள்ளம்… மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்…!!

கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். கோதாவரி ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரும், ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் துணை நிலை ஆளுநருக்கு பலமுறை கோரிக்கை முன்வைத்தனர். ஆனால், தடுப்புச் சுவர் அமைப்பதற்கு இதுவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |