ரஷ்யாவின் கிழக்கு சைபீரிய அருகே இருக்கும் பனி பாறைகள் உடைந்ததில் 550க்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களில் 536 மீனவர்களை ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தற்போது மீட்டுள்ளது. முன்னதாக 60 பேர் எவ்வித உதவியுமின்றி அவர்களாகவே அருகிலிருக்கும் கடற்கரைக்கு வந்துவிட்டதாகவும் ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் இருந்தவர்களை மீட்கும் இந்த மீட்புப் பணி சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. மீனவர்களை மீட்கும்போது, பனி பாறைகள் கடலிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு சென்றுவிட்டதாக சில மீனவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை 300 மீனவர்களும், ஞாயிற்றுக் கிழமை 600 மீனவர்களும் இதேபோல மீட்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற மீனவர்கள் பாதுகாப்பு அறிவிப்புகளை புறக்கணித்து, பனி பாறைகளில் மீன்பிடிக்க செல்வதே இதற்கு காரணம் என்று மீட்ப்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.