பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து பிரேசிலின் கடலோர காவல்படை விசாரித்து வருகின்றது.