Categories
தேசிய செய்திகள்

குடியிருப்பில் புகுந்த 3 மலை பாம்புகள்… அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்..!!

மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு சென்று தேடிப் பார்த்ததில் சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

இதையடுத்து இரண்டு பாம்புகளையும் பைகளில் வைத்து விட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் மீண்டும் பாம்பு இருப்பதாக இன்னொரு  அழைப்பை வந்ததை தொடர்ந்து, 3-ஆவதாக சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். ஆக மொத்தம் 3 பாம்புகள் ஒரு நாளில் பிடிபட்டுள்ளன. பிடிபட்ட பாம்புகள் மருத்துவப் பரிசோதனைக்கு பின் பைகளில் அடைத்து கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டன.

Categories

Tech |