தீவில் உள்ள கடற்கரையில் கிடைத்த அதிபயங்கரமான உலோகப் பந்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஹார்பர் என்ற தீவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய உலோக பந்தினை பார்த்த இவர் அங்கு இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விண்வெளி நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு இது செயற்கைக்கோளோகவோ அல்லது விண்வெளியிலிருந்து வந்த பொருளாகவும் இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து தொடர்ந்த ஆராய்ச்சியில் இது சுமார் 41 கிலோ கிராம் எடையுள்ள டைட்டானியத்தலான உருண்டை எனவும் விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இதனுடைய இயக்க வெப்பநிலை – 170 டிகிரி செல்சியஸ் மற்றும் -190 டிகிரி செல்சியஸ் என்றும் இதனுடைய கொள்ளளவு சுமார் 43 லிட்டர் எனவும் தெரிவித்துள்ளார்கள்.