Categories
உலக செய்திகள்

“உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன்”…. பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ..!!

உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

Image result for Rare Deep-Sea Jellyfish Caught Shape-Shifting On Camera

அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு வடிவில் இருந்த நிலையில், சிறிதுநேரத்தில் ஆதன் தோற்றம்  பாலித்தீன் தாள் போன்று மாறியது.

Image result for Rare Deep-Sea Jellyfish Caught Shape-Shifting On Camera

ஜெல்லி மீனின் இத்தகைய உருவமாற்றம்  பற்றி கடலடி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,  இந்த ஜெல்லி மீன்  உருவத்தை மாற்றுவது எதிரிகளிடம் இருந்து அதனை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கூறுகின்றனர்.

Categories

Tech |