உயிர்கள் இறப்பதற்குக் காரணமான சயனைடு தான் உயிர்கள் உருவாவதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் சயனைடை வைத்து ரசாயன எதிர்வினையை தயாரித்துள்ளனர். சுமார் 400 கோடி வருடங்களுக்கு முன் பூமியில் கரிம உயிர்களை உருவாக்குவதற்கு சயனைடு தான் உதவியிருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். நைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களால் உருவானது தான் சையனைடு.
சயனைடை உட்கொள்பவர்களுக்கு முதலில் தலைவலி, எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, வாந்தி போன்றவை ஏற்படும். அதன்பின்பு குறைவான இரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகி உயிரிழப்பர். சயனைடு சாப்பிட்டவரை காப்பாற்ற முடியாது.
அப்படி காப்பாற்றப்பட்டாலும் கூட வாழ்நாள் முழுக்க நரம்பு தொடர்புடைய நோய்களால் அவதிபட வேண்டிய நிலை ஏற்படும். ஹைட்ரஜன் சையனைடு கேஸ் மற்றும் ஹைட்ரஜன் உப்புகள் அதிகமாக இருப்பது தான் இதற்கு காரணம்.
ஆய்வாளர்கள் இது பற்றி தெரிவித்ததாவது, பூமியில் இருக்கும் உயிர்கள் தோன்றுவதற்கு சயனைடு முக்கிய பங்காக இருந்திருக்கும். இதுமட்டுமல்லாமல் வேற்றுகிரகவாசிகளை கண்டறிவதற்கும் சயனைடு உதவியிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.