Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழகத்திற்கும் ஆபத்தா…??

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள்ளதாக புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு மாணவர்களால் எழுதப்படுகின்றது. இந்நிலையில் புதுவையில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு பெறுவது தொடர்பான வழக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |