Categories
மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல – உச்ச நீதிமன்றம் அதிரடி …!!

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை, இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை.

மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் கவனம் செலுத்தும் அனைத்து கட்சிகளையும் பாராட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து கூறியபோது, “நீட் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து நீதிமன்றத்தை அணுகி இருப்பது தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறானது” என கூறினார். திமுக சார்பாக வழக்கில் ஆஜரான வில்சன் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டம் அடிப்படை உரிமையை உறுதி செய்கின்றது.

ஆனால் அது தற்போது அமல்படுத்தப்படவில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளை பின்பற்றுவதற்கு கோரிக்கை விடுக்கின்றோம். இட ஒதுக்கீடு அதிகரிக்க கேட்டு வரவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் எதிரானது என வாதாடியுள்ளார். அவருக்கு பதிலளித்த நீதிபதி, “யாருடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் மட்டுமே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 செல்லுபடியாகும்.

தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் அனைவரும் கவனம் செலுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல எனக் கூறினார். இதற்கு வில்சன், “பாதிப்படைந்த அனைவரும் நீதிமன்றத்தை நாட முடியாது எனவே அவர்களை  பிரதிநிதித்துவப்படுத்துவது அரசியல் கட்சிகளின் கடமை. உரிமைக்காக தொடுக்கப்பட்ட போரினால் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது தற்போது இருக்கும் இட ஒதுக்கீட்டை மறுத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் பெரிதும் பாதிக்கப்படுவர்” என கூறினார்

Categories

Tech |