Categories
டெக்னாலஜி பல்சுவை

குடியிருப்பு சான்றிதழ் வேண்டுமா..? ஆன்லைன்ல எப்படி வாங்குவது… வாங்க பாக்கலாம்..!!

ஆன்லைன் மூலமாக குடியிருப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம்

ஆதார் அட்டை/ குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Residence Certificate என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.

தொடர்ந்து உங்களது CAN எண்ணைக் கொடுக்கவேண்டும். CAN எண் இல்லாதவர்கள் Generate CAN என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும். CAN எண் பதிவு செய்தபின்னர் வரும் பக்கத்தில் உங்களது விவரங்களை நிரப்பவேண்டும். பின்னர் Submit கொடுக்க வேண்டும்.

பின்னர் List of Documents பகுதியில் (Photo, Current Address Proof, Self Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளலை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும். தொடர்ந்து ஆன்லைன் மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பின்னர் அதிகாரிகளால் உங்களது விண்ணப்பம் சரிபார்த்த பின்பு உங்களது தொலைப்பேசிக்கு செய்தி வரும். அதன் பின் இதே லாகின் ஐடி மூலம் உள்நுழையும் போது உங்களுக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |