ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன.
பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. இது குறித்து இந்தியா தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருசிரா கம்போஜ் தெரிவித்ததாவது, தீவிரவாத அமைப்பினர் மனிதநேயம் என்னும் பெயரில் தங்களுக்கு சாதகமான வேலைகளை செய்துகொள்கிறார்கள்.
அந்த ஆதாரங்களின் படி எங்களது இந்த முடிவு வெளியானது. எங்களின் பக்கத்து நாடுகளில் தடைகளிலிருந்து தப்பிப்பதற்காக மனிதநேய அமைப்புகள் என்று தங்களை காண்பித்துக் கொண்ட பல தீவிரவாத அமைப்புகள் மேற்கொண்ட பல சம்பவங்கள் இருக்கின்றன. இது சர்வதேச சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு தீவிரவதாக அமைப்பினர் மனிதநேய உதவி என்னும் பெயரில் அதனை பயன்படுத்தி நிதி திரட்டி போராளிகளை பணியமர்த்தும் வேலைகளை மேற்கொள்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.