Categories
உலக செய்திகள்

இறைச்சி கொடுத்த அதிர்ச்சி.. சாப்பிட போனவருக்கு ஏற்பட்ட சந்தேகம்.. என்ன நடந்தது..?

அமெரிக்காவில் உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபருக்கு இறைச்சியை குறைவாக கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு 22 வயதுடைய Antonio Chacon என்ற இளைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

Antonio Chacon இறைச்சி சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் சாப்பாட்டிலிருந்த இறைச்சித் துண்டு அளவு சிறியதாக இருந்துள்ளது. இதனால் Antonio-விற்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக தன் வாகனத்தில் இருந்த எலக்ட்ரானிக் தராசை கொண்டு வந்தார். அதனை உணவக பணியாளரை அழைத்து எடைபோட்டிருக்கிறார்.

அவர்கள் அந்த இறைச்சி 200 கிராம் எடை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் Antonio, எடை போட்டதில், அதில் பாதி 100 கிராம் தான் இருந்திருக்கிறது. எனவே, இதனை உணவகத்தின் பெயரை குறிப்பிட்டு, இணையத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

Categories

Tech |