Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா !!!

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா 

தேவையானபொருட்கள் :

வேகவைத்த கொண்டைக்கடலை –  1 கப்

தக்காளி – 2

பிரிஞ்சி இலை – 1

சீரகம் –  1/2  ஸ்பூன்

கடுகு – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் –  1/4  ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மல்லிதூள் – 3/4 ஸ்பூன்

சென்னா மசாலா – 1/2 ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி –  1  ஸ்பூன்

உப்பு –  தேவையானஅளவு

அரைக்க :

வெங்காயம் –  2

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு –  6  பற்கள்

பட்டை –  1

கிராம்பு –  3

ஏலக்காய் –  2

செய்முறை :

முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .தக்காளியை தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை , சீரகம்  , கடுகு , கறிவேப்பிலை மற்றும்  அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

Restaurant Style Senna Masalaக்கான பட முடிவுகள்

இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்  , மல்லிதூள் , சென்னா மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் . நன்கு வதங்கியதும் உப்பு , வேகவைத்த கடலை மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி நன்கு வேகவிட்டு கஸ்தூரி மேத்தி , கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா  தயார் !!!

 

 

Categories

Tech |