சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 694 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 27,986 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னையில் 90 ஆக இருந்தது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.