அமெரிக்க நாட்டிற்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக சுகாதார மையம், அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும், அவர்கள் அமெரிக்க நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமானது இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, ஃபைசர், சினோவாக் மற்றும் சினோபார்ம் போன்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட மக்களுக்கு, அமெரிக்காவிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.