சுவிட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் கூறிய கருத்து மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் டெல்டா வகை மாறுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். எனினும் சில மக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது வேண்டுமென்றே சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்படுபவர்களில், பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலர் கோரிக்கை வைத்தது, மக்களிடையே பிரச்சனை மற்றும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.
அதாவது, FDP தேசிய கவுன்சிலரான Kurt Fluri என்பவர், தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வரை தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களது மருத்துவத்திற்கான செலவு, காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், SP தேசிய கவுன்சிலரான Celine Widmer என்பவர், தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு அதிகமான விதிமுறைகளை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.