இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் போன்ற எந்த இடங்களுக்கும் செல்ல முடியாது.
இந்த கட்டுப்பாடுகள், இன்றிலிருந்து, 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர், பார்கள் மற்றும் உணவகங்களில், “சூப்பர் கிரீன் ஹெல்த் பாஸ்” வைத்திருப்பவர்களை மட்டும் தான் அனுமதிப்பார்கள். இந்த சான்றிதழ், தடுப்பூசி செலுத்தி கொண்ட அல்லது சமீபத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.