ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவி வருவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோவிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிபா, ஒசாகா, கனகவா மற்றும் சைதமா போன்ற நகர்களில் கடும் விதிகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். மேலும் டோக்கியோவை சுற்றி அமைந்திருக்கும் கியாட்டோ, ஹியோகோன் டி, ஹொக்கைடோ மற்றும் ஃபுகுயோகா போன்ற 5 நகர்களில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.