Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுக்கு வரணும்னா…. இனிமேல் கட்டுப்பாட்டு அதிகமா இருக்கும்….. -ஓமன் அரசு….!!

ஓமன் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
ஓமன் நாட்டிற்கு வரும் மக்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை, வான், கடல் மற்றும் தரைவழி போன்ற அனைத்து போக்குவரத்திற்கும் உண்டு.
நாட்டின் எல்லைப்பகுதிகளில் இருக்கும் சோதனை சாவடிகளில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின்பு, தான் மக்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், இதற்கு முன்பே  8 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டிருக்கிறது.
எனவே, புதிய கட்டுப்பாடுகளின் படி, 18 வயதுக்கு அதிகமான பிற நாட்டு மக்கள், கட்டாயமாக 2  தவணை டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஓமன் நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களுக்கு மட்டும்  விலக்கு அளிக்கப்படுகிறது.

Categories

Tech |