Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடலனா இதுதான் கதி..! அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்… பெண்கள் வேதனை..!!

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதிய உணவின் போது அனைவருடனும் அமர்ந்து சாப்பிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேலை பார்க்கும் போது முழு நேரமும் FFP2 மாஸ்க் அணிந்தே வேலை பார்க்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு மன உளைச்சல் உண்டாவதாக கூறிய அந்த பெண் சில குறிப்பிட்ட காரணங்களால் தன்னால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோன்று ஆர்காவ் பகுதியில் பணிபுரியும் 26 வயது பெண் ஒருவரும் தனது அலுவலகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தினால் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் Unia தடுப்பூசி போட்டுக்கொள்வது சுவிட்சர்லாந்தில் கட்டாயமாக்கப்பட்டாலும் தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக செயல்பட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |