போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் பூச்செடிகள் நட்டு வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் சாலைகளில் சுவர்களை எழுப்பி இரும்பு ஆணியை பதித்துள்ளனர். இதற்கு விவசாயிகள் அதன் அருகே பூச்செடிகளை நட்டு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆக பரவியுள்ளது.