ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் உதவி மேலாளராக கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் பிருந்தாவன் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சேகர் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து சேகர் மீது பற்றி எரிந்த தீயை அருகில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்த பிறகு உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேகர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்ப பிரச்சனை காரணமாக சேகர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.