Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டியூசன் வந்தபோது… “9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தூக்கிய போலீஸ்..!!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்..

பின்னர் இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த நபர் மீது கோபி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. புகாரின் அடிப்படையில் சண்முகத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. குட் டச், பேட் டச் என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே இப்படி தரக்குறைவாக நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |