Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில்… கைவரிசையை கட்டி சென்ற… மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை நகரில் ஓய்வு பெற்ற சூப்பிரண்டு அதிகாரியான பாரதி என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது மனைவியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் ஜன்னல்களை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 50,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பாரதி காலை எழுந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த பொருட்கள் சிதறியும் இருந்துள்ளது.

இது குறித்து பாரதி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துராஜ் தலைமையில் போலீசார் விசாரணை செய்துள்ளார். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் சேகரித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |