Categories
அரசியல்

“சபாஷ்!”… தரிசு நிலத்தை தோட்டமாக மாற்றி… அசத்திய ஓய்வு பெற்ற ஆசிரியை…!!!

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தரிசு நிலத்தை தன் கடின உழைப்பின் மூலமாக நன்றாக விளையக்கூடிய பூமியாக மாற்றி அசத்தியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த 62 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண், ஆசிரியையாக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். எனவே ஓய்வு பெற்றபின் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த வருடத்தில் ககர்சாக்ஷ்ரி விருது பெற்றவர். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை.

எனது கடின உழைப்பால் தரிசாக இருந்த நான்கரை ஏக்கர் நிலத்தை, பழத்தோட்டங்கள், நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் நிறைந்திருக்கும் தோட்டங்களாக மாற்றியிருக்கிறேன். வங்கியில் கடன் பெற்று 20 மாடுகள் வாங்கி இருக்கிறேன். அதில் பால் கறந்து விற்பனை செய்கிறேன்.

இதற்கு கிராமத்தில் உள்ள நிலங்களை விற்றுவிட்டு நகரத்திற்கு செல்லும் எண்ணம் சிறிதும் வந்ததில்லை. செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இயற்கை வேளாண்மை வல்லுநர் சுபாஷ் நடத்திய பட்டறையில் பங்கேற்று கற்றுக்கொண்டேன்.

நேர்மையான முறையில் விவசாயத்தை செய்தால், கண்டிப்பாக லாபம் பெற முடியும். நாங்கள் விற்பனை செய்யும் பழங்களுக்கும் நல்ல விலை பெற முடிகிறது. விடுமுறையில் ஆஸ்திரேலியா,  இங்கிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் என் பிள்ளைகளை பார்க்க செல்வேன். அங்கு சென்றாலும் என் நினைவுகள் எல்லாம் பண்ணைகளில் தான் வலம் வரும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |