Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓய்..! கட்டத்துக்குள நில்லு – ”கொரோனா விழிப்புணர்வு”…. செம ஐடியா …!!

மாநிலம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைவரையும் வியக்க வைக்கும் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகின்றது.

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனவை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய கடைகள் , திரையரங்குகள் , மால்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்ட மத்திய மாநில அரசுகள் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்ததோடு அதிகமாக பொதுமக்கள்  கூட வேண்டாம். பெரியவர்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்தி வருகிறது.ஒருவரிடமிருந்து மற்றொருவரை தொடுவதால் கொரோனா பரவுவதால் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஒருவரை ஒருவர் தொட்டும் அளவிற்கு அருகருகே நிற்கக்கூடாது. சிறிது இடைவெளி விட்டு நிற்க வேண்டுமென்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியின்   டாஸ்மார்க் ஒன்றில் குடிமகன்கள் மது வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒருவரை ஒருவர் தொடுவதால் கொரோனா வந்து விடும் என்பதற்காக ஒருவருக்கும் , மற்றொருவருக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வெள்ளை கோடு போடப்பட்டுள்ளது. அந்த கோட்டிற்கு முன்னும் பின்னும் , ஒருவரை ஒருவர் தொடாத வகையில் வரிசையாக நின்று மது வாங்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் மது வாங்க வரும் போது ஓய்! கட்டத்துக்குள் நில்லு என்று  அறிவுறுத்துகின்றார்.

Categories

Tech |