நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை தீ பற்றி எரிந்தது குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக 40 வயதான காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது. பின்னர் அதனை விசாரித்த போது அங்கு இருந்த தனியார் விடுதி ஊழியர்கள் யானையின் மீது டயரை எரித்து அதன் மீது வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் அந்த யானை பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது. இதுதொடர்பாக விசாரணை செய்து அந்த ஊழியர்களை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2021
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமலஹாசன் ட்விட்டர்ஒன்றை பகிர்ந்துள்ளார். காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.