தேர்வு ரத்தானதால் கொரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட அனைத்து பொருள்களையும் திரும்ப தருமாறு பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன.
இதற்கு முன்பாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறை வழங்குவது அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க பயன்படுத்தும் கருவி ஆல்கஹால் கலந்த சனிடைசர் உள்ளிட்டவை அனைத்து தேர்வு மையங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு ரத்தானதால் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து பொருட்களையும் திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தற்போது மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.